விரைவில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு - முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

0 590

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்குகிறது. இந்தநிலையில், பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments