கர்தார்பூர்: இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு திடீர் அறிவிப்பு

0 277

கர்தார்பூர் வழித்தட திட்ட தொடக்க நாளான நாளை இந்தியாவிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு கட்டணமில்லை என அறிவித்திருந்த பாகிஸ்தான், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கும், பஞ்சாபிலுள்ள குருத்வாராவுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் நாளை சீக்கியர்களின் புனித யாத்திரை தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 1ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், யாத்ரீகர்களிடம் நாளையும்,  12ம் தேதியும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், பாஸ்போர்ட் கொண்டு வர தேவையில்லை எனவும் அறிவித்திருந்தார்.

இருப்பினும், இந்திய யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு, ஆயிரத்து 450 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என  தற்போது தெரிவித்துள்ளது.

இதனிடையே கர்தார்பூர் சாலை திறக்கப்படுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments