இடைத்தேர்தல் வெற்றி: வெற்றிடம் என கொக்கரித்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

0 473

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கொக்கரித்தவர்களுக்கு இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க. முற்றுப்புளளி வைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. தொண்டர்களால் சூழப்பட்ட இயக்கம் என்று தெரிவித்த அவர், தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை எனக் குறிப்பிட்டார்.

அ.தி.மு.க. வீழ்ந்து விடும் என்று கனவு கண்டவர்களுக்கு இடைத் தேர்தல் வெற்றி தக்க பாடம் புகட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வரும் திருமண உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் இவற்றை மறைத்து விட முடியாது எனக் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.வி.வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், உடுமலை ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments