முதலமைச்சர் நாராயணசாமி மீது, மத்திய அரசிடம் கிரண்பேடி புகார்

0 261

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உரிய அனுமதிபெறாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சிங்கப்பூர் சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, வாட்ஸ்-அப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் நாராயணசாமி, சிங்கப்பூருக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்வதாகத் தெரிவித்துவிட்டு அரசுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போது, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்று கூறியுள்ள கிரண்பேடி, நாராயணசாமிமீது மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments