கர்தார்பூர் வழித்தடத்தை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி

0 254

கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கவுள்ள நிலையில், அந்த சாலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

குருனானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானின், கர்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே புதிய சாலை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார். இதனையொட்டி, அந்த சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments