பணி நாடுநர்களுக்கு உரிய அனுபவ சான்று வழங்க தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு

0 144

தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், பணி நாடுநர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பணி அனுபவ சான்று வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி நாடுநர்களுக்கு, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் பணி அனுபவ சான்று வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக புகார் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிமன்றத்திற்கும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தொடர்ச்சியாக புகார்கள் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு வகுத்துள்ள ஒழுங்காற்று சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, பணி அனுபவ சான்றினை உரிய நேரத்தில் வழங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் பணி அனுபவ சான்று வழங்காமல் இழுத்தடித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments