அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன

0 240

சேலம் குகைப் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன.

அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் பல சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பிட்ட இரண்டு சாய ஆலைகளில் ரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் திருமணிமுத்தாற்றில் நேரடியாக கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இது குறித்து தகவலறிந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாய ஆலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது இரு ஆலைகளும் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததோடு ரசாயன கழிவுகளை ஆற்றில் கலந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இரண்டு சாய ஆலைகளும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் உத்தரவின் படி இடித்து அகற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments