மழைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்க தயார் நிலையில் மின்சாரவாரியம்

0 140

மழைக்காலத்தின் போது மின்சாரம் வழங்குவதில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்களில் அவர் கலந்துகொண்டார்.

மேலும் வால்ராசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர், தண்ணீர்பந்தல் பாளையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments