மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் ரூ.820 கோடி செலவு

0 241

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்றன. தேர்தலுக்கான செலவுக் கணக்கை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் அக்டோபர் 31ம் தேதி தாக்கல் செய்தது.

மக்களவைத் தேர்தல் கட்சிப் பிரச்சாரத்திற்காக 626 கோடியே 30 லட்சம் ரூபாயும், வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக 193 கோடியே 90 லட்சம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 516 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது. அதைவிட தற்போது, 304 கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments