திருவள்ளுவர் நிலைப்பாட்டில் பாஜக ஒருபோதும் பின்வாங்காது-முரளிதர் ராவ்

0 226

திருவள்ளுவர் நிலைப்பாட்டில் பாஜக தெளிவாக உள்ளது என்றும், அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பாஜக நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர் ராவ், திருவள்ளுவர் கடவுள் மறுப்பாளர் இல்லை என்பதை, அவரது எழுத்துக்கள் மூலமே உணரமுடியும் என்றார்.

திமுக போன்ற கட்சிகள் அவரை கடவுள் மறுப்பாளராக முன்னெடுத்து செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்றும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது என்றும் முரளிதர் ராவ் கூறினார்.

ரஜினி பாஜகவில் சேர்ந்ததாகவும் சேரவுள்ளதாக பாஜக ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments