பெண் குழந்தைகளுக்காக ’தோழி ’ என்ற அமைப்பு தொடக்கம்

0 179

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை காவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தோழி அமைப்பிற்காக செயல்பட 70 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளை அணுகும் முறை குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி  தலைமையில் மனநல மருத்துவர் ஷாலினி பயிற்சி அளித்தார்.

அதன்பின்னர் தோழி அமைப்பிற்காக செயல்படும் பெண் காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments