ரிசர்வ் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 129

டெல்லி ரிசர்வங்கி அருகே, இளைஞர் காங்கிரசார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்தன் 3ம் ஆண்டையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனால், பொதுமக்கள், சிறு வியாபாரிகள், வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்க மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன.

இதனையொட்டி டெல்லியில், ரிசர்வ் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கழுத்தில் பண மாலை அணிந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சிலரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments