குழந்தைகளை பாதுகாக்க மாநில அளவில் பாதுகாப்புக்குழு அமைக்க வேண்டும்- லதா ரஜினிகாந்த்
குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ, மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் இருந்தபோதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மாநில அளவில் நிபுணர்கள் அடங்கிய பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Comments