உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நவ.11ல் பதவியேற்பு

0 246

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சஹி வருகிற 11ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.

அவருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30ஆவது தலைமை நீதிபதியாகவும் ஏ.பி சஹி வரும் 11ஆம் தேதி பதவி ஏற்று கொள்கிறார்.

திங்கட்கிழமை காலை காலை 9:20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்..

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments