நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

0 135

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தையின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாணவனின் தந்தை தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், தனது மகன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாகவும், ஆள்மாறாட்ட முறைகேட்டிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு அக்டோபர் 30ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அதற்குள் மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ததற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments