அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

0 471

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோருக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சுமார் 4,000 பாதுகாப்புப் படையினர் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றம் நிறைந்த இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எட்டு தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அயோத்தி நிலம் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு அமைதியை நிலைநிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, அம்மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே, டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரிகள் இருவருக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments