அதிமுகவிற்கு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்து பரிசீலனை - ஜெயக்குமார்

0 366

அதிமுகவிற்கு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழின் முதல் அகராதியை உருவாக்கியவரும், தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவருமான வீரமாமுனிவர், இத்தாலி நாட்டில் பிறந்து 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தவர்.

கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தமது பெயரை, தமிழ்மீது கொண்ட பற்றால் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டவர். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், "தேம்பாவணி" என்ற பெருங்காவியத்தையும் இயற்றியுள்ளார். திருக்குறள் உள்ளிட்ட நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

வீரமாமுனிவர் எழுதிய "பரமார்த்த குருவின் கதை" தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். வீரமாமுனிவரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மெரீனாவில் வீரமாமுனிவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒருபோதும் கட்சியில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் அதிமுக உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments