நவ.13,14,15ம் தேதிகளில் நான்கு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு..!

0 512

நவம்பர் 13 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு நான்கு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளது.

தமது பணி ஓய்வுக்கு முந்தைய மூன்று நாட்களை முக்கிய தீர்ப்புகளுக்காக ரஞ்சன் கோகய் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கும் அதில் ஒன்று.

ரபேல் விமானங்கள் தொடர்பான வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு மற்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதியின் அலுவலகத்தை இணைப்பது தொடர்பான வழக்கு ஆகிய நான்கு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் கடந்த 4ம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால் இதுவரை தீர்ப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments