வடிவேலு பாணியில் நூதன திருட்டு..!

0 472

நடிகர் வடிவேலு அரிசிக் கடையில் எடைக்கல்லை திருடுவது போல, சென்னையில் பேக் வாங்க வேண்டும் என கூறி வாடிக்கையாளர் ஒருவர் கல்லாவில் பணம் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசிடிவி காட்சியை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்....

எடைக் கல்லை திருடுவதற்காக அரிசிக் கடை உரிமையாளரின் கவனத்தை நடிகர் வடிவேலு திசைத் திருப்புவது போல், பேக் கடையொன்றில் புகுந்த நபர், அங்கு அடுக்கி வைக்கட்டுள்ள பேக்குகளில் அது, இது என உரிமையாளரை அலைகழித்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள எல்.பி.சாலையில் கமலக்கண்ணன் என்பவர் கியூ பேக்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், பள்ளி மாணவர்களுக்கு நிறைய பேக் தேவையென்று கமலக்கண்ணனிடம் கேட்டுள்ளார். அவர் ஒவ்வொன்றாக எடுத்து காண்பித்தார்.

சுமார் 8 ஆயிரம் ரூபாய்க்கு பேக் வாங்கிய அந்த நபர், எடுத்துச் செல்ல ஆள் அழைத்து வருவதாக சென்றார். நீண்டநேரமாக அவர் திரும்ப வராததால், சந்தேகமடைந்த கமலக்கண்ணன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது தான் அவர், கள்ளாவில் இருந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதனிடையே, மற்றொரு கடையிலும் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூதன முறையில் பணம் திருடும் இந்த நபரை, சிசிடிவி காட்சிகள் உதவியுடன், அடையாறு போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments