காதலியுடன் காரில் வலம்.. தொழில்அதிபர் எரித்துக் கொலை..!

0 527

ரூர் அருகே காதலிகளுடன் காரில் சுற்றிய தொழில் அதிபர் , காருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாயை காக்க தந்தை கொன்ற வழக்கில் மகன் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கரூர் மாவட்டம் பரமத்தி மு.வேலாம்பாளையம் பகுதியில் புதன்கிழமை கருகிய ஆண் சடலத்துடன் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்று கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த கரூர் எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். இதில் காரின் எண்ணை வைத்து கார் , கரூர் நொய்யலை சேர்ந்த தொழில் அதிபர் ரங்கசாமிக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர்.

அவரது வீட்டுக்கு சென்று மனைவி கவிதா, மகன் அஸ்வின் ஆகியோரிடம் விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

முதலில் அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது என்றவர்கள், தங்களிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு காரை எடுத்துச்சென்று விட்டதாக கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போது மன்மதனாக வலம் வந்த தொழில் அதிபரின் மறுபக்கம் வெளிச்சத்திற்கு வந்தது.

பாக்குமட்டை தட்டுக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த ரங்கசாமிக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது காதலிகளுடன் காரில் சுற்றுவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்த நிலையில் இது பற்றி கேட்டு மனைவி கவிதா சண்டையிடுவது வழக்கமாகி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

சம்பவத்தன்று ஒரு பெண்ணுடன் ரங்கசாமி காரில் வெளியில் சென்று வந்தது குறித்து கேள்வி எழுப்பிய மனைவி கவிதாவை, ரங்கசாமி தாக்கியதாக கூறப்படுகின்றது.

தாக்குதலில் கவிதாவின் வாயில் அடிபட்டு ரத்தம் வழிந்ததை கண்ட மகன் அஸ்வின் ஆவேசம் அடைந்து தந்தை ரங்கசாமியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்துள்ளார். இதில் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் பின்னர் ரங்கசாமியின் சடலத்தை தூக்கி காரில் போட்டு, அதனை எரிக்க ஒரு கேனில் டீசலையும் எடுத்துக் கொண்டு கவிதாவும் அஸ்வினும் புறப்பட்டுள்ளனர்.

இதில் வேலாம்பாளையம் அருகே கார் புதர் நிறைந்த பகுதி ஒன்றில் சேற்றில் சிக்கியது . பல முறை முயன்றும் காரை அங்கிருந்து எடுக்க இயலாததால். காதலிகளுடன் சுற்றிய காரோடு ரங்கசாமிக்கு தீவைக்க முடிவு செய்தனர்.

காருக்குள் இருந்த டீசலை எடுத்து ரங்கசாமியின் உடல் மற்றும் காரில் ஊற்றி தீவைத்துவிட்டு இருவரும் அங்கிருந்து வீடு திரும்பியதாகவும் காவல்துறையினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தனது கணவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு கவுதா தனது தாலிகயிற்றை கழட்டிக் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கணவனின் தவறான உடல் சார்ந்த தேடல்கள், மனைவி மற்றும் மகனை ஆத்திரம் கொள்ள செய்ததுடன் கொலை வழக்கிலும் சிக்கவைத்து விட்டதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments