"அயர்ன் மேன்" படக்காட்சிகளை நிஜமாக்க முனைந்துள்ள சீன ராணுவம்

0 414

ஹாலிவுட் படங்களில் வருவதைப் போன்று, எதிரிகளை, ராணுவ வீரர்கள் பறந்து பறந்து தாக்க வல்ல ஆயுதங்களுடன் கூடிய கவச உடைப்பிரிவை சீனா ராணுவம் உருவாக்க உள்ளது.

ஹாலிவுட் படமான "அயர்ன் மேன்" படத்தில் வரும் காட்சிகளைப் போன்று, ராணுவ வீரர்கள் திடீரென பறந்து பறந்து எதிரிகளை தாக்கவல்ல, ஆயுதம் தாங்கிய கவச உடைகளை வடிவமைக்க சீன ராணுவம் முடிவு செய்துள்ளது. எறிகுண்டுகள், துப்பாக்கிகள், குண்டுகளை அடுத்தடுத்து உமிழும் பிரத்யேக கருவிகள் கொண்டதாக, அந்த கவச உடையைத் தயாரிக்க சீன ராணுவம் உத்தேசித்துள்ளது.

எதிரிகளை நோக்கி முன்னேறும் ராணுவ வீரர், திடீரென எதிரிகள் சூழ்ந்துவிட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில், மேலே பறந்து பறந்து தாக்கும் வகையில், இந்த பிரத்யேக கவச ஆடை வடிவமைக்கப்படுகிறது. இதையொட்டி, "திறன்மிக்க போர்வீரரின் பிரத்யேக கவச அமைப்பு-2019" என்ற தலைப்பில், தலைநகர் பெய்ஜிங்கில், சீன ராணுவத்தின் ஆயுத தளவாட கொள்முதல் பிரிவு போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் தேர்வாகும் நிறுவனங்களிடமிருந்து, அயர்ன் மேன் சூப்பர் ஹீரோ உடை போன்ற பிரத்யேக கவச உடைகளை கொள்முதல் செய்ய சீன ராணுவம் முடிவு செய்திருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments