தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு

0 1078

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகியது.

ரஜினியின் 167வது படமான தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த மோஷன் போஸ்டரை தமிழில் நடிகர் கமல் வெளியிட்டார். மலையாளத்தில் மோகன்லால் வெளியிட, தெலுங்கில் மகேஷ் பாபுவும், ஹிந்தியில் சல்மான் கானும் வெளியிட்டுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் , நயன்தாரா, நிவேதா தாமஸ், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசைமைக்கிறார்.

இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஹேஷ்டேக் தர்பார் மோஷன் போஸ்டர் (#DARBAR MOTION POSTER) என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments