கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சூதாட்ட வழக்கில் இரு வீரர்கள் கைது

0 172

கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட இரு வீரர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் (Bellary Tuskers) மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் (Hubli Tigers) ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சி.எம். கவுதம், வீரர் அபரார் காஸி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மந்தமாக பேட் செய்வதற்காக அவர்கள் இருவரும் 20 லட்சம் ரூபாய் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சி.எம். கவுதம் என்ற வீரர், ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments