ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அதிநவீன சேட்டிலைட் போன்

0 332

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான அதிநவீன சாட்டிலைட் போனின் சோதனை சென்னையில் பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. 

விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லைதாண்டிச் செல்வது, புயலில் சிக்குவது, காணாமல் போவது, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்குவது என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர்.

ஆழ்கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றதும் செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டுவிடும். தற்போது பயன்படுத்தி வரும் சேட்டிலைட் போனிலும் கரையில் இருந்து தகவல்களைப் பெறலாமே தவிர, பதிலுக்கு மீனவர்கள் பேசவோ, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவோ முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் ஓமன் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்று ஆழ்கடலில் பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன செயற்கைக்கோள் தொலை தொடர்பு சாட்டிலைட் போன்களை தயாரித்துள்ளனர். இந்த நவீன போன் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சோதனை செய்யப்பட்டது.

SPIT - 1000 என்ற பெயர் கொண்ட இந்த சேட்டிலைட் போனில், தொடுதிரையுடன் கூடிய போன் வசதி, குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, வானிலை குறித்த எச்சரிக்கை, வீடியோ கால், துல்லியமான திசைகாட்டி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கின்றன. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

சோதனை வெற்றிகரமாக முடிந்ததுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் மத்திய அரசுக்கு சான்றிதழ் வழங்கிய பின் இந்த அதிநவீன சாட்டிலைட் போன் மானிய விலையில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments