முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் புகார்

0 214

முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை  மாநகர காவல் ஆணையரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இதுகுறித்து புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, சமூகவலைதளத்தில் நாகர் சேனை என்ற பெயரில் உள்ள அமைப்பு முரசொலி அலுவலகம் முன்பு 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருப்பதாகவும், பாஜக தான் இதன் பின்னால் இருந்து இயக்குகிறது என்றும் தெரிவித்தார்.

ஆதலால் இதுதொடர்பாக  முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தாம் புகார் அளித்துள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments