விவசாயிகளுக்கான "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம்

0 367

விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தின் மண்ணின் தன்மை, சாகுபடிக்கு ஏற்ற பயிர் எது, காலநிலை மாற்றம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" மற்றும் ஜியோ அக்ரி இணைப்பு முகப்பு ஆகியவற்றை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், துரைகண்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பண்ணை செயலியை ஒரு விவசாயி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், அவரது நிலம், மண்ணின் தன்மை, நீர்மட்டம் உள்ளிட்டவற்றை எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஆய்வு செய்வர்.

இதையடுத்து, அந்த விவசாயி, பண்ணை செல்லிடப்பேசி வாயிலாக, தமது நிலம் குறித்த தகவல், மண்ணின் தன்மை, சாகுபடி செய்ய ஏற்ற பயிர்கள் எவை, அதிக மகசூல் தரும் விதைகள் குறித்த தகவல், கால நிலை மாற்றம், மழை தொடர்பான தகவல் உள்ளிட்டவற்றை தேவையான போது தெரிந்துகொள்ள முடியும்.

வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பண்ணை செல்லிடப்பேசி செயலியுடன் கூடிய கைப்பேசியை அமைச்சர்கள் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments