ராமேஸ்வரம் மீனவர்களின் மீன், மீன்பிடி சாதனங்கள் சேதம்: இலங்கை கடற்படை அட்டூழியம்

0 148

கச்சத்தீவு அருகே, மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, படகுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள்   கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே  மீன்பிடித்துவிட்டுக் கரைதிரும்பியபோது, ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் இந்தப் பகுதியில் மீன் பிடித்தால், கைது செய்வோம் என எச்சரித்துள்ளனர்.

அத்துடன் மீன் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் படகுகளுக்கு தலா 80 ஆயிரம் ரூபாய் வரை  தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள், மத்திய-மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடுக்கடலில் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments