கரை திரும்பாத 5 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர் - இந்திய கடற்படை தகவல்

0 203

கரைதிரும்பாத கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் பெங்களூருவில் இருந்து 300 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாக மாநில மீன்வளத்துறை இயக்குனர் சமீரல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிகளுக்கு 850 விசைப்படகுகள் சென்றன. கியார் மற்றும் மகா புயல் எச்சரிக்கையை அடுத்து 845 விசைப்படகுகள் கேரளா, கர்நாடா, மகராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரமாக கரை சேர்ந்தன.

இதில், கரை திரும்பாத 5 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 64 மீனவர்களின் நிலை குறித்து அறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இந்நிலையில், கரை திரும்பாத 5 விசைப்படகுகளை கண்டுபிடிப்பது குறித்து விள்ளவிளை மீனவ கிராமத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில மீன்வளத்துறை இயக்குநர் சமீரல், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் பெங்களூரு அருகே மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments