அரபிக் கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் 93 மீனவர்கள் கரைத்திரும்பவில்லை

0 228

கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் கரைத்திரும்பாதவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

15 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை, வள்ளவிளை, தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடந்த வாரம் உருவான கயார் மற்றும் மஹா புயலால் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை விடப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத், கோவா, மும்பை கடற்கரைப்பகுதியில் தமிழக மீனவர்கள் கரை சேர்ந்தனர்.

இதற்கிடையே 6 விசைப்படகுகளில் சென்ற 78 மீனவர்கள் கரைத்திரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், கரைத்திரும்பாத மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments