தேவி திரையரங்கின் ஒரு திரையில் பிகில் படத்தின் காட்சி ரத்து

0 4094

பிகில் திரைப்படத்தைப் பார்க்க 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், சென்னை தேவி திரையரங்கின் ஒரு திரையில் அப்படத்தின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் உள்ள தேவி பாரடைஸ் அரங்கில், 3.15 மணிக்கு பிகில் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் 4 இருக்கைகள் மட்டுமே முன் பதிவாகி இருந்ததால் அந்த அரங்கில் பிகில் காட்சி ரத்து செய்யப்பட்டது.

டிக்கெட் வாங்கிய 4 பேரும், அதே வளாகத்தில் உள்ள தேவி அரங்கில் பிகில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

குறைந்தபட்சம் 20 பேர் இருந்தால் மட்டுமே காட்சி திரையிடப்படும் என திரையரங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது- அதே சமயம் படம் வெளியாகி
ஏழாவது நாளிலேயே பெரிய நடிகரின் படத்திற்கு இதுபோன்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments