உயிரிழந்த சிறுவனின் உடலை காட்சிப்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது - ராதாகிருஷ்ணன்

0 1197

ஆள்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித் சடலத்தை காட்சிப்படுத்தாதது ஏன் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுஜித் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என்றார். சுஜித்தைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் ஆனால் முடிவு எதிர்மறையாக கிடைத்து விட்டதாகவும் கூறினார்.

சுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்த அவர், சடலத்தை மீட்பது குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படியே செயல்பட்டதாக விளக்கம் அளித்தார். கும்பகோணம் தீவிபத்தில் உயிரிழந்த சிறார்களின் சடலங்களை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் விமர்சனத்திற்கு ஆளானதை அவர் சுட்டிக் காட்டினார். 

சுஜித்தை மீட்கும் பணிக்கு 11 கோடி ரூபாய் செலவானதாக தாம் கூறியதைப் போன்று வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் வதந்தி என்றும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments