ஓமலூர் பகுதியில் அதிகரித்து வரும் இரட்டைத் திருடர்களின் அட்டகாசம்

0 503

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அதிகரித்து வரும் இரட்டைத் திருடர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஓமலூர் கடைவீதி அருகேயுள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் தலைக்கவசம் அணிந்தவாறு நுழையும் 2 திருடர்கள், அங்கிருந்த விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

தலைக்கவசம் அணிந்தவாறு வந்து செல்லும் இந்த இரட்டைத் திருடர்கள், இரு தினங்களுக்கு முன் சாலையில் நடந்து வந்த பெண் ஒருவரை கத்தி முனையில் மடக்கி நகைப்பறிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அதே பகுதியில் விலையுயர்ந்த 4 இருசக்கர வாகனங்களும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments