தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக பலம் உயர்வு..!

0 560

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளும் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். இதில், ஆளும் அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை சபாநாயகர் நீங்கலாக, 122 ஆக இருந்தது. தற்போது, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளும் அதிமுகவின் பலம், 124ஆக உயர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகளில், திமுக உறுப்பினர்கள் பலம் 100ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பலம் 7ஆக குறைந்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒருவர். சட்டப்பேரவையில், திமுக தலைமையிலான கூட்டணியின் பலம், 108ஆக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments