ஆந்திர மாநிலத்தில் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

0 330

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக சாரல் மழையாக பொழிந்து நேற்று மிக கன மழையாக உருவெடுத்தது.

இந்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட இடங்களிலும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏனம் பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், அது கோதாவரி அருகே கரையைக் கடக்கும் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தல்லரேவு-காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments