பஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

0 545

பஞ்சமி நிலம் தொடர்பாக தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வடகிழக்கு பருவமழை காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

முரசொலி அலுவலகம் இருக்கும் நிலம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், அது முடிந்து போன பிரச்சனை என்றும் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments