கழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா? காதல் சைக்கோ அடாவடிகள்

0 615

சத்தியமங்கலம் அருகே முன்னாள் காதலியை மீண்டும் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி கழுத்தில் கைத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாரின் நடவடிக்கை பிடிக்காமல் போனதால் ஜனனி காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. சிவகுமார் அவ்வப்போது அந்த பெண்ணை மறித்து ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தொந்தரவு செய்வதை வழக்கமாக்க செய்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண் பதில் ஏதும் கூறாமல் தவிர்த்துள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் உள்ள குளத்துப்பிரிவு என்ற பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து நின்ற அந்த பெண்ணை கத்திமுனையில் மிரட்டி காதலிக்க வற்புறுத்தியுள்ளான் சைக்கோ சிவகுமார்..!

ஒரு கட்டத்தில் கத்தியை அந்த பெண்ணின் கழுத்தில் வைத்து அழுத்திய படி என்னை காதலிக்கா விட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை கண்டு பதறிபோன அக்கம்பக்கத்தினர் சிவக்குமாரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தனர் ஆனால் அவன் அந்த பெண்ணை இழுத்துக் கொண்டு புதர் மறைவில் அமர்ந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி வந்தான்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஹெல்மெட்டால் சைக்கோ சிவக்குமாரை தாக்க அருகில் நின்ற இளைஞர்களும் பாய்ந்து சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

அடிவிழுந்த அடுத்த நிமிடம் தன்னை அந்த பெண் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி அங்கிருந்தவர்களிடம் நியாயம் கேட்டான் சைக்கோ சிவக்குமார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் காதல் சைக்கோ சிவக்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். 

ஒரு ஆண் மீது பெண்ணுக்கு காதல் வந்தால் எப்படி யாராலும் தடுக்க இயலாதோ, அதேபோல அந்த பெண் காதலை முறித்தாலும் யாரும் கேட்க முடியாது.

இருவரிடையேயான காதலில் முறிவு ஏற்பட்டால் பெரியவர்கள் மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம்... அதைவிடுத்து கத்தியை கழுத்தில் வைத்து தீர்த்துகட்டிவிடுவேன் என்று மிரட்டி காதலை மீண்டும் வரவைக்க நினைப்பது முட்டாள் தனம் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments