சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற எதிர்ப்பு

0 310

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சிலர் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

செனட் சபை உறுப்பினர் மிட்ச் மெக்கோனல் (mitch mcconnell) மற்றும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி.க்கள் சிலர் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். அதில் , அமெரிக்க படைகளை திரும்ப பெறும் டிரம்பின் முடிவால் சிரியா அதிபர் ஆஸாத், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ரஷியா, ஈரான் நாடுகள்தான் பயனடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தடுத்து நிறுத்தப்படவில்லையெனில், பயங்கரவாதம் வேகமாக பரவவும், ரஷியாவின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிக்கவும், இஸ்ரேல் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் ஈரான் ஆதரவு சக்திகள் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகனை வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் அழைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், மூர்க்கத்தனமான நாடுகளை தண்டித்தது போல துருக்கியையும் தண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments