எலும்புக்கூடுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின் கண்காட்சி

0 215

சீனாவில் உள்ள தேசிய அருங்காட்சியகளில் எலும்புக்கூடுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின் கண்காட்சி தொடங்கியது.

சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஆமைகளின் ஓடு, விலங்குகளின் எலும்புக்கூடுகள் மீது செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் சீனாவின் வளர்ச்சிக்கும், பழங்கால எழுத்துக்கள் பண்டைய காலத்து மக்களின் வாழ்க்கை முறையை அறியவும்  உதவுகிறது. இங்கு கிடைக்கப்பட்ட எலும்பு கூடுகளின் கல்வெட்டுகள் 2017ம் ஆண்டு  யுனெஸ்கோவின் உலக நினைவுகளை பதிவு செய்யும் புத்தகத்தில் இடம்பெற்றன.

இந்நிலையில், சீன எலும்புக்கூடு கல்வெட்டுகளின் 120வது ஆண்டுவிழா கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தேசிய அருங்கியாட்சியகத்தில் பழங்காலத்திய எலும்புக்கூடுகள், சிற்பிகள், வெண்கலப்பொருட்கள், கற்கள் மற்றும் புத்தகங்களின் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments