பேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது அதிமுக

0 221

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பேனர், சுபஸ்ரீ உயிரிழப்பு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

சுபஸ்ரீ மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என 2018ஆம் ஆண்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யபட்டது.

அப்போது சீன பிரமதரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாக கூறினர்.

கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என சுபஸ்ரீயின் தந்தைக்கு அறிவுத்திய நீதிபதிகள், அவரது மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். Gfx out

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments