டெல்லியிலுள்ள ரா அலுவலகங்கள், ராணுவ அலுவலகங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: புலனாய்வுத் துறை

0 168

டெல்லியிலுள்ள ரா அமைப்பின் அலுவலகங்கள், இந்திய ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஜமா-உத்-தவா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் துறை (intelligence) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புலனாய்வு துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், டெல்லியிலுள்ள ரா அலுவலகங்கள் மீதும், ராணுவ அலுவலகங்கள் மீதும் இந்த மாத ((அக்டோபர் மாதம்)) கடைசியில் தாக்குதல் நடத்துவதற்கு ஜமா-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், துணை ராணுவப் படைகளின் அலுவலகங்கள் மற்றும் காவல்துறை அலுவலகங்கள் மீதும், காவல்துறையினரின் குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments