பாண்டாக்களைப் போல வண்ணம் தீட்டப்பட்ட நாய்க்குட்டிகள்

சீனாவில் உள்ள வளர்ப்பு பிராணிகள் நிலையம் ஒன்றில், பாண்டாவைப்போல வண்ணம் தீட்டப்பட்ட நாய்க்குட்டிகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
செங்க்டு எனும் பகுதியில் இயங்கிவரும் அந்நிலையத்தில், அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பாண்டாக்களைப் போன்ற உடல்வாகுள்ள சில நாய்க்குட்டிகள் அங்கு கொண்டுவரப்பட்டு, அவற்றின் கண், காது உள்ளிட்ட பகுதிகளில் பாண்டாக்களைப் போல வண்ணம் தீட்டிவிட்டுள்ளனர்.
இந்த நாய்க்குட்டிகளை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். அச்சு அசலாக பாண்டாவை போல தோற்றமளிக்கும் நாய்க்குட்டிகள், இணையத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
Comments