ஆன்லைன் தேடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பெயர்களில் தோனியின் பெயர் முதலிடம்

0 598

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பெயரை ஆன்லைனில் தேடும்போதே, அதிகமான நபர்கள், தீங்கு இழைக்கக்கூடிய பிற இணையதளங்களுக்கு மறைமுகமாக இழுத்துச்செல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரபலங்களின் பெயர்களை ஆன்லைனில் தேடும்போது, அது தொடர்பாக திரையில் காட்டப்படும் சில லிங்குகள் சில நேரங்களில், பயனாளர்களை பாதுகாப்பற்ற சில இணையதளங்களுக்கு கொண்டுசென்று அவர்களது சுய தகவல்கள் தவறான நோக்கத்திற்காக சுரண்டுகின்றன.

இந்நிலையில் மெக்கபீ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், 2019ஆம் ஆண்டில் தோனியின் பெயரை ஆன்லைனில் தேடும்போதே அதிகமான நபர்கள், ஆபத்தான பிற இணையதளங்களுக்கு இழுத்துச்செல்லப்படுவது தெரியவந்தது.

இப்பட்டியலின் 2ஆவது இடத்தில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் உள்ளது.

நடிகைகள் சன்னி லியோன் மற்றும் ராதிகே ஆப்தே ஆகியோரின் பெயர்கள் 4 மற்றும் 6ஆவது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments