இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

0 377

இந்து சமய அறநிலையத்துறை பணியில் சேரும் முன் சட்டப்படி உறுதி மொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரிய மனுவில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை சட்டத்தில் அத்துறையின் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன்பு தெய்வத்தின் முன்னிலையில் தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதி மொழி எடுப்பதுடன், கையெழுத்திட  வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டப்பிரிவின் படி தற்போதுள்ள அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் உறுதி மொழி ஏற்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரி சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி, தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் நவம்பர் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments