சந்திராயன் -2ன் விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா தகவல்

0 525

நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தில், சந்திராயன் - 2ன் லேண்டர் விக்ரம் தொடர்பான எவ்வித ஆதாரங்களும் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. நிலவில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, அதன் நிலை குறித்து கண்டறியும் நடவடிக்கைகளில் இஸ்ரோ இறங்கியது.

வெற்றிகரமாக நிலவை சுற்றி வரும் சந்திராயன் - 2ன் ஆர்பிட்டர் மற்றும் நாசாவின் ஆர்பிட்டர் ஆகியவை ஏற்கனவே எடுத்த புகைப்படங்களில் லேண்டர் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் லேண்டரை நிலவில் தரையிறக்க திட்டமிட்ட பகுதியில் நாசாவின் ஆர்பிட்டர் மீண்டும் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதிலும் லேண்டர் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments