மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் சீனாவுடன் இணைந்து செயல்பட முடிவு

0 351

மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை சீனாவின் உதவியுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிக்குன் குனியா மற்றும் மஞ்சள் காமாலையைக் கண்டறிந்து குணப்படுத்த உதவும் மருத்துவக்கருவிகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே கண்டறிந்துள்ளது. இதுவரை 8 உபகரணங்களை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. அவற்றை உலக அளவில் கொண்டு செல்லும் பொருட்டு சீனாவின் ஃபாங்செங்காங் நகரில் உள்ள சர்வதேச மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயல்பட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது, சீன நகர மேயர் பேன் ஜோங் போ தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவுடன் நடந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments