வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 176

வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுவிற்கு தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் கார்த்திகை மாத மகாதீபத்தை ஏற்ற அனுமதிகோரி திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 2015ம் ஆண்டு முதல் வனத்துறையில் அனுமதி பெற்று கோயிலுக்கு சென்று வரும் நிலையில் தற்போது வெள்ளியங்கிரி கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், பூஜைகள் நடத்துவதற்கும் அனுமதிக்கேட்டு ஆகஸ்ட் மாதம் அளித்த மனுவிற்கு அரசு பதிலளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஷேஷசாயி அமர்வு, மனு மீது தமிழக அரசு, வனத்துறை,
அறநிலையத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கை அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments