இந்தியாவிலிருந்து துருக்கி செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை

0 2013

துருக்கிக்கு செல்லும், இந்திய சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு துருக்கி அரசு ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த மாதம் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்திலும் பாகிஸ்தானை ஆதரித்து பேசியிருந்தார்.

இதையடுத்து இந்தியா - துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், துருக்கி செல்லவிருந்த பிரதமர் மோடியின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து துருக்கி செல்லும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments