சின்னசுருளி அருவியில் சீறிப்பாய்ந்து கொட்டும் வெள்ளம்

0 321

தேனிமாவட்டத்தில் ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேகமலை வனப்பகுதியில் கடந்த சிலநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகளைத் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது.

இதனால் சின்ன சுருளிஅருவி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். மேகமலை வனப்பகுதியில் மழை நீடிப்பதால் அருவியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சின்ன சுருளி அருவியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் வைகைஅணை நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments