கணவனின் போதை பழக்கத்தால் விஷம் குடித்த மனைவி

0 218

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தம்பதி விஷம் குடித்ததில் கணவர் உயிரிழந்தார்.

பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராமர், அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்ததால் அவருக்கும் அவரது மனைவி பாக்யலட்சுமிக்கு தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்சனை முற்றியதால் பாக்கியலட்சுமி பயிருக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும் அதை பார்த்த ராமர், அதே பூச்சி மருந்தை தானும் குடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் பாக்யலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments