நியூசிலாந்தில் புதிய மாநாடு கட்டிடம் 2வது நாளாக தீப்பற்றி எரிவதால் கரும் புகைமூட்டம்

0 148

நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையம் 2வது நாளாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

ஆக்லாந்தின் ஸ்கை சிட்டி டவர் அருகே உள்ள கசினோ வளாகத்தில் மிகப்பெரிய மாநாடு மையம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிட பணி முடிந்ததும், வரும் 2021ம் ஆண்டு ஆசியா-பசிபிக் வணிக ஒத்துழைப்பு மாநாடு((APEC)) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  2வது நாளாக பற்றி எரியும் தீயை தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டதுடன்  மையக்கட்டிடம் பணி முடியாவிட்டாலும்,  திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்,கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments